ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)
ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்) சினிமாவில் ஆவணப்படம் என்ற வகைமை ஒரு புவியலாளரின் ஆய்வுப்பயணத்தில் இருந்து தொடங்கியது. ரோமம் விற்பனை செய்யும் ஒரு பிரெஞ்சு நிறுவனம் 1910களில், அரிதான ரோமங்களைக் கண்டுபிடித்து வர எஸ்கிமோ பிரதேசத்தின் தொலை தூரப் பகுதிகளுக்கு ஆய்வாளர்களை அனுப்பி வைத்தது. 'ஆவணப்பட சினிமாவின் தந்தையாக' மாறியவர் அப்படியொரு பயணத்தில் உடன் சென்றவர் ஆவார். முக்கியமான நோக்கத்திற்காக என்பதை விட கேளிக்கைக்காகவே அவர் இந்தப் பயணத்தில் இணைந்தார். அதுபோன்ற ஒரு தொலைதூரப் பகுதிக்கு தன்னுடன் ஒரு கையடக்க கேமராவை அவர் கொண்டுசென்றார். அதன் மூலமே 'நானூக் ஆப் தி நார்த்' (Nanook of the north) பிறந்தது. அது ஆவணப்பட சினிமா என்ற கருத்தாக்கத்தில் புரட்சியை உண்டு பண்ணியது. அதை உருவாக்கியவர் வாழக்கையையும் மாற்றியமைத்தது. எதார்த்தத்தைக் கலைத்துவத்துடன் பதிவு செய்து, எடுத்துக்கொண்ட விஷயத்தைத் தெளிவான முறையில் கைகளில் வழங்குவதான 'ஆவணப்படம்' என்பது தொடக்கத்தில் இருந்தே ஒரு புதிய கலை வடிவமாக உருப்பெற ஏங்கிக் ...