இடுகைகள்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்

படம்
நரகவாசிகளின் வியர்வை -தீனன் மாந்தர்கள்: இளைஞன், கண் தெரியாதவர், பூக்கடைக்காரன், பிச்சைக்காரி, போலீஸ், மனிதன் 1,2,3 இடங்கள்: வீட்டின் அறை, வீட்டு வளாகம், சாலை, சிறுவர் பூங்கா காட்சி-1 வீட்டின் இருண்ட அறையில் அதிகாலைப் பொழுதில் பழைய சுவர்கள் தூசடைந்த இருண்ட அறையில் ஜன்னலில் கட்டப்பட்ட துணித் துளைகள் வழியே சூரிய ஒளி கற்றைகளாக மேசையின் மீது விழுகிறது. மேடையின் நடுவே மிகவும் முன்னே வைக்கப்பட்ட மேசையின் மீது பாதி நிரம்பிய Syringe, பிளாஸ்டிக் கவரில் இருக்கும் Needle, காலியான மருந்துக் குப்பி, ஊசி போடுவதற்கான கயிறு உள்ளது. கருப்பு வார் பனியன், டிராக் பேண்ட் அணிந்த 20 வயதுடைய ஒரு இளைஞன் மேசைக்கு இடதுபுறம் தள்ளி மேடையின் நடுப்பகுதிக்கு சற்று ஓரமாக போடப்பட்ட சோபாவில் அமர்ந்தபடி, நேரே வைக்கப்பட்டிருக்கும் தொலைக்க்காட்சியின் சேனல்களை தொடர்ந்து மாற்றுகிறான் (சோபா பார்வையாளர்களை நோக்கி உள்ளது). தொலைக்காட்சியில் பக்தி நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள் மாறுகின்றன (இளைஞனின் முகத்தில் படும் தொலைக்காட்சி வண்ண ஒளிகள் மாறுவதை மட்டுமே பார்வையாளர்கள் காண்கின்றனர்). பின்னணியில் சேனல்கள் மாறும் இரைச...

ரமேஷ் பிரேதனுக்கு இரங்கல்

படம்
      விகடன் தடம் இதழ் இளங்கலை  படிக்கும்போது அறிமுகமானது. இராஜபாளையத்திலிருந்து விருதுநகருக்கு ஒரு போட்டியில் கலந்துகொள்ள செல்வதற்கென தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த சமயத்தில் வாங்கினேன். அதுவே விகடன் தடம் கடைசி இதழ். அத்துடன் இதழ் நின்றுவிட்டது. ரமேஷ் பிரேதன் அந்த இதழின் மூலமே அறிமுகமானார். அதன்பின் காந்தியைக் கொன்றது தவறுதான், அருகன் மேடு, ஐந்தவித்தான், பிரேமுடன் இணைந்து எழுதிய இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும் போன்ற அவருடைய நூல்கள் சிலவற்றை வாசித்தேன். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்தித்துவிட்டு வந்து கருப்பண்ணா, ஹரீஷ் ஆகியோர் பேசியதை எல்லாம் என்னுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போதே அவரை ஒருமுறையேனும் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது‌. சுதந்திரச் சிந்தனையில் இருப்போர் கூட்டாக சந்தித்து அவரது படைப்புகள் குறித்து அவரிடையே உரையாட வேண்டுமென்ற திட்டமும் இருந்தது. கடைசி வரை அது நிறைவேறாமல் போயிற்று.       எட்டு மாதங்கள் கழித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துக்கு முதுகலை படிக்கச் செல்வதற்குரிய சூழல் உருவானது. பாண்டிச்சேரிக்குப் போ...

அறிவார்ந்த பேச்சும் சலிப்பும் - அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
அறிவார்ந்த பேச்சும் சலிப்பும் - அழகுராஜ் ராமமூர்த்தி         “வாசிப்பு இல்லாத ஒருவரிடம் அதிக நேரம் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. நண்பர்கள், சுற்றத்தார் ஆகியோரிடம் பேசும்போது நகைச்சுவைக்கு அப்பால் அங்கு அறிவார்ந்த உரையாடலே நிகழ்வதில்லை.” என்ற ஜெயமோகனின் கூற்றையொட்டி பலர் எதிர்வினை ஆற்றியிருந்தனர். "அறிவார்ந்த" என்ற சொல்லே எதிர்வினைப் பதிவுகளின் மையமாக இருந்தது. அறிவார்ந்த உரையாடல் உலகம் முழுவதும் நாள்தோறும் வாசிப்பவர், வாசிக்காதவர் என்ற எந்தப் பாகுபாடுமின்றி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அறிவு என்ற சொல்லுக்கு அறிதல் என்பதே கல்விப்புலம் சார்ந்து தொடர்ச்சியாக சொல்லப்படும் பொருள். அறிதல் நாள்தோறும் புலன் இயக்கம் மூலம் சுற்றத்தார் மூலம் செயல்பாட்டிலேயே இருக்கிறது.      காலையில் தேநீர் கடைக்கு ஒருவர் செல்கிறாரென வைத்துக்கொள்வோம். அங்கு தேநீர் கடைக்காரர் ஊரிலுள்ள ஏதோவொரு புதிய செய்தியைச் சொல்கிறார். அது ஊரில் புதிதாக செயல்படுத்தப்பட இருக்கும் அரசு அல்லது அரசு சாரா நலத்திட்டங்களாக இருக்கலாம். அல்லது மாற்றப்பட்ட புதிய பேருந்து வருகை அட்டவணையாக ...

இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
    இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி       பிரதாபசந்திர விலாசம் தமிழ் நாடக வரலாற்றில் நாடகத்தின் போக்கை மாற்றிய நாடக இலக்கிய வரிசையில் நிற்கத்தக்க படைப்பு. இந்நாடகத்தை திண்டிவனத்தைச் சேர்ந்த ப. வ. இராமசாமி ராஜு எழுதியுள்ளார். இந்திரா பார்த்தசாரதி திண்ணை இதழில் 2006ல் எழுதிய “தமிழின் முதல் இசை நாடகம்” என்ற கட்டுரை பிரதாப சந்திர விலாசம் பற்றிய கவனத்தைத் தமிழ் பரப்பில் கொடுத்தது. அதன்மூலம் 2007ல் இந்நாடகம் ஏனி இந்தியன் பதிப்பகம் மூலம் மறு பதிப்பும் ஆனது. அக்கட்டுரையிலிருந்தே நாமும் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம்.    1871ல் பிரதாபசந்திர விலாசம் எழுதப்பட்டதாக இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார். மேலும் இந்நாடகம் மேடை ஏற்றப்பட்டதா? என்கிற ஐயத்தை முன்வைத்து க.நா.சு தன்னிடம் தனிப்பேச்சில் பகிர்ந்த செய்தியையும் குறிப்பிட்டிருக்கிறார். பம்மல் சம்பந்த முதலியாரின் “நாடக மேடை நினைவுகள்” நூல் இராமசாமி ராஜு மற்றும் பிரதாபசந்திர விலாசம் அரங்கேறிய செய்தியை அறியத் தருகிறது. “காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக கா...

காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
    காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி     குருகு இணைய இதழில் எழுதப்பட்டுள்ள கிறிஸ்துவின் சித்திரங்கள் கட்டுரைத் தொடர் தெய்வீக அம்சம், துயரமும் மறைஞானமும், உடலும் ரத்தமும், உலகப்போர்கள் என்ற நான்கு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாமரைக்கண்ணன் அவிநாசி எழுதிய இத்தொடர் முழுமையாக இணையத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது..     கிறிஸ்துவின் ஓவியங்களைப் பற்றிய இத்தொடர் ஓவியங்களை கிறிஸ்தவர்கள் எப்படியாக பார்த்தார்கள் என்பதிலிருந்து தொடங்குகிறது. மோசேயின் காலத்தில் சிற்பங்களையும் சிலைகளையும் எகிப்தியர் முதலான பிற இனத்தவர்கள் வணங்கியபோதும் கூட உருவமற்ற வழிபாட்டையே ஆபிரகாமின் வழியில் அவரது வம்சாவழியினர் கைக்கொண்டனர். இவையெல்லாம் பிற்கால கிறிஸ்தவத்திற்குரிய தோற்றுவாய் என்பதால் அவற்றையும் கணக்கில் கொண்டே ஓவியம் முதலான கலைகள் கிறிஸ்தவ பின்புலத்தில் செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல குறியீடுகள் தான் ஓவியத்திற்கும் எழுத்திற்கும் அடிப்படை. உருவ வழிபாடற்ற பின்னணியைக் கிறிஸ்தவம் கைக்கொண்டதால் கிறிஸ்துவின் ஓவி...

வாழ்வே செயல் "ம. இலெ. தங்கப்பா" -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
  வாழ்வே செயல் "ம. இலெ. தங்கப்பா" -அழகுராஜ் ராமமூர்த்தி      2018ஆம் ஆண்டு ம.இலெ. தங்கப்பா, பிரபஞ்சன், க.ப.அறவாணன் ஆகியோர் மறைந்தனர். அதுதான் எனக்கு ம.இலெ.தங்கப்பா குறித்த அறிமுகமாகவும் அமைந்தது.  பேராசிரியர் எஸ்.இரவிச்சந்திரனுடன் தோழர் வேலாயுதம் பொன்னுசாமி, விஜய் ஐயப்பன் அண்ணன் ஆகியோரோடு நானும் பேசிக்கொண்டிருந்த நாளொன்றில் தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பாவிற்கும் ஆய்வறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் இடையிலான எழுத்துத் தொடர்பு மற்றும் த. கோவேந்தன் குறித்து பேசப்பட்டது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை படிக்கும் போது வாரம் ஒரு ஆவணப்படத்தைத் திரையிடும் முயற்சியாக தொடங்கிய "WATCH THE DOCUMENTARY PARTICIPATE THE DISCUSSION" நிகழ்ச்சியில் புதுச்சேரி வரலாற்று ஆய்வு அறக்கட்டளை தயாரிப்பில் பி.என்.எஸ் பாண்டியன் இயக்கிய ம.இலெ.தங்கப்பாவின் "வானகத்தின் வாழ்வியக்கம்" ஆவணப்படத்தைத் திரையிடவும் எண்ணம் இருந்தது. காலம் ஒத்துழைக்கவில்லை. தென்தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற தமிழ் ஆளுமைகளென்று பாரதியார், கி.ராஜநாராயணன், க. பஞ்சாங்கம், ராஜ் கௌதமன், ம.இலெ. தங்கப்பா ...

துவக்குகளின் மினுப்பான "இன்னும் வராத சேதி” -அழகுராஜ் ராமமூர்த்தி

படம்
  துவக்குகளின் மினுப்பான "இன்னும் வராத சேதி”  -அழகுராஜ் ராமமூர்த்தி     1980களில் தமிழ் இலக்கியத்தின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. புதுப்புது கொள்கைகள் மற்றும் எழுத்து முறைகளை தங்கள் எழுத்தில் மேற்கொள்ள ஆரம்பித்தனர். திறனாய்வும் பெருகியது. இது தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் உலகளவிலும் நடந்திருக்கிறது. இதன் சாட்சியாகவே கா. சிவத்தம்பி, எம். ஏ. நுஃமான் போன்ற அறிஞர்களின் கட்டுரைகள் இருக்கின்றன. அவர்களது கட்டுரைகளில் இடம்பெறும் சுட்டுதல்கள் வாயிலாக இலக்கியத்தில் நிகழ்ந்த மாற்றம் தொடர்பான செய்திகளை அறிந்திட முடியும். இலங்கையில் கவிதை எழுதத் தொடங்கிய பெண்கள் இயக்கம் குறித்த செய்தியை “இன்னும் வராத சேதி” என்ற ஊர்வசியின் கவிதை நூலில் இடம் பெற்ற பின்னட்டை குறிப்பின் வாயிலாக எம். ஏ. நுஃமான் அறிய தருகிறார். அதில் “1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பெயர் அலையாக எழுச்சி பெற்றது” என குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி ஒரு வரலாற்றுத் தகவல்‌. அந்த இயக்கத்தில் ஒருவராக இருந்த ஊர்வசியின் முதல் கவிதை நூலான “இன்னு...