சுதந்திரச் சிந்தனை 59 - சுகுமாரன்

 சுதந்திரச் சிந்தனையின் 59வது கலந்துரையாடலில் பேசியது தற்செயல் நிகழ்வு எனினும் சுகுமாரனைப் பற்றிய சிறு அறிமுகத்தை வழங்க முடிந்தது. அவரது கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளோடு அவருடைய தொகுப்பு மற்றும் பதிப்பு நூல்களென சிலவற்றை வாசித்திருக்கிறேன். ஆனால் சிறுகதைகளை இதுவரை வாசிக்கவில்லை. இனிவரும் காலங்களில் வாசிக்க வேண்டும். 

    அழகியலோடு கருத்தியலுக்கும் முக்கியத்துவம் தரும் கவிதைகளையும் மூலத்தோடு ஒட்டிய வாசகர்களைச் சென்றடையும் எளிய மொழிபெயர்ப்பும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதனைக் கருத்தாக வைக்கும் கட்டுரைகளுமாக தொடர்ந்து எழுதிவரும் சுகுமாரனின் சிறப்பாசிரியத்துவத்தில் பரிசல் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட படப்பெட்டி ரித்விக் கட்டக் சிறப்பிதழை தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே தீனனின் மொழிபெயர்ப்பில் கட்டக்கின் நாடகங்களும் நேர்காணல்களும் நமது தளத்தில் வெளிவந்து கொண்டிருப்பதை அனைவரும் அறிவீர்கள்.

    மேலும் சுகுமாரனுடனான உரையாடல் நேர்காணல் வடிவில் தளத்தில் வெளியிடுவதற்கான பணிகளும் தொடங்க இருக்கிறது. சுகுமாரனின் உரையை கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

-அழகுராஜ்

https://youtu.be/RjRAhYLys6w?si=7hFLJp_KaYsd73fI

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு நாள் சுதந்திரம்: ரோமன் ஹாலிடே -அழகுராஜ் ராமமூர்த்தி

குடும்பத்தேர் (மூன்றாம் அலை, முதல் பாகம்) - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)

குடும்பத்தேர் (இரண்டாம் அலை) -ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)