இடுகைகள்

கூதிர் மின்னிதழ்

படம்
  கூதிர் மின்னிதழ்   கூதிர் மின்னிதழ் பருவம் -1, சனவரி 2024 கூதிர் மின்னிதழ் பருவம் -2, பிப்ரவரி 2024 கூதிர் மின்னிதழ் பருவம் -3, மார்ச் 2024 கூதிர் மின்னிதழ் பருவம் -4, ஏப்ரல் 2024 கூதிர் மின்னிதழ் பருவம் -5, மே 2024 தொகுப்பாசிரியர்கள் ரா.அழகுராஜ் ஜெ.மோகன் ஆ.கிரண்குமார் ச.தணிகைவேலன் இணையதளப் பக்கங்கள்   WhatsApp Channel  https://whatsapp.com/channel/0029VaF4s3JLY6cyKudoAb0R Instagram   I'm on Instagram as @koothirmagazine_2024.  https://www.instagram.com/koothirmagazine_2024?igsh=OGY3MTU3OGY1Mw== Facebook  https://www.facebook.com/profile.php?id=61554987526965 Blogspot    https://koothirmagazine.blogspot.com/?m=1 தொடர்புக்கு koothirmagazine@gmail.com https://wa.me/918807339644

கடிக்கும் சீதமண்டலம்

படம்
கடிக்கும் சீதமண்டலம் - அழகுராஜ்       கண்டராதித்தனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு சீதமண்டலம். இந்த கவிதைத் தொகுப்பிற்கு சுருக்கமும் ஆழமுமான முன்னுரையை கவிஞர் ஸ்ரீ நேசன் எழுதியுள்ளார். இதில் அவர் சொல்லக்கூடிய முக்கியமான தகவல் கவிஞர் கண்டராதித்தனுடைய கவிதை வெளியும் அவருடைய நேர் உலக வாழ்வும் பெருத்த இடைவெளி கொண்டது என்பதாகும். அதையே கண்டராதித்தனும் ஆமோதிக்கிறார். இன்றைய நவீன விமர்சன முறைக்குள் பலர் எழுத்து திட்டமிட்டு அமையக்கூடியது. உள்தரிசனம், உள்ளொளி என்றெல்லாம் கிடையாது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். கவிதையும் கூட அத்தகைய திட்டமிட்ட செயல்பாடு என வரையறுக்க நினைத்திடினும் கவிதைக்கும் ஏனைய இலக்கிய வடிவங்களுக்கும் இடையில் வேறுபாட்டு நிலை இருப்பதை கவிஞர் கண்டராதித்தனை கொண்டு நாம் அறிய முடிகிறது. உள்மனப் போராட்டம், பிரக்ஞையில் வெளிவரும் சொற்கள் போன்றவை மீது ஆழ்ந்த விமர்சனப் பார்வை வரும் இலக்கியச் சூழலில் கண்டராதித்தனின் இத்தகைய உணர்வு நிலை மதிக்கப்படுமா என்பது கேள்வியே. ஆனால் அதுவே உண்மை என்பது அவரது நிலைப்பாடு. இப்படியான தீவிரப் பிரக்ஞை நிலையில் இருந்து சொற்கள் வெளிப்படுமா? அவை கவிதைகளாக கரு

சிறிய பக்கங்களின் மாபெரும் சூதாட்டம்

படம்
  சிறிய பக்கங்களின் மாபெரும் சூதாட்டம்  - அழகுராஜ்       சுரேஷ்குமார இந்திரஜித் 1982 முதல் 2005 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு மாபெரும் சூதாட்டம். இதில் மொத்தம் 39 கதைகள் இடம்பெற்றுள்ளன. இதன் தொகுப்பாக்கம் இறங்குவரிசை முறையில் அமைந்து கதைகளுக்கு வலுசேர்க்கிறது. இந்த சிறுகதை தொகுப்புக்குள் 1982ல் வெளிவந்த “அலையும் சிறகுகள்" சிறுகதை தொகுப்பும் 1993இல் வெளியான “மறைந்து திரியும் கிழவன்" தொகுப்பும் அடக்கம். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் சுரேஷ்குமார இந்திரஜித் எழுதியுள்ள 25 கதைகளை “பின்நவீனத்துவவாதியின் மனைவி" என்ற நூலாக தொகுத்துள்ளார். அதில் மொத்தம் 25 கதைகள் இடம் பெற்றுள்ளது. அதில் 16 கதைகள் மாபெரும் சூதாட்டம் தொகுப்பில் இல்லாத கதைகள் ஆகும். அந்த கதைகளையும் மாபெரும் சூதாட்டம் தொகுப்பையும் சேர்த்து சுரேஷ்குமார இந்திரஜித்தின் 55 கதைகளை குறித்ததாக இக்கட்டுரை அமைகிறது .       சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் காட்சிகளை சிக்கனமான சொற்களைக் கொண்டு கையாண்டிருக்கும் தன்மை கதைக்குள் தொய்வின்றி செல்வதற்கும் வாசிப்பதற்கும் ஏது

முன்னோடியின் துணிவு -அழகுராஜ்

படம்
  முன்னோடியின் துணிவு - அழகுராஜ் பஞ்சும் பசியும் -தொ.மு.சி ரகுநாதன்        இந்த வருடத்தை இலக்கிய வருடம் என்றும் இலக்கிய கொண்டாட்டங்களும் கலந்துரையாடல்களும் விரிந்த வாசிப்பின் வழியே புதிய பல தகவல்களை பழைய பனுவல்கள் மற்றும் நிகழ்வுகள் வாயிலாக அறியும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக்கூடிய வருடம் என்றும் எடுத்துக் கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வைக்கம் நூற்றாண்டு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நூற்றாண்டு, எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், அழ. வள்ளியப்பா நூற்றாண்டு, வள்ளலார் 200 போன்றவற்றோடு ரகுநாதன் நூற்றாண்டும் நிறைவுபெறுகிறது. இதில் அதிகம் கலந்துரையாடல்கள் மூலம் பேசப்படாதவை சேரன்மாதேவி குருகுல போராட்டமும் ரகுநாதனும் என்பது என் கருத்து. பேசப்படும் பிற எழுத்தாளர்களின் படைப்புகளும் சிந்தனையும் நேர்திசையில் கடத்தப்படுகிறதா? என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.         “பஞ்சும் பசியும்" நாவல் வழி ரகுநாதனின் படைப்பிலக்கிய மேதமையைப் பேசுவது தான் இந்த கட்டுரை இப்போது எழுதப்படுவதன் நோக்கமாக இருக்கிறது. ரகுநாதன் தமிழ் இலக்கியத்திற்கு செய்த மிக முக்கியமான பங்களிப்பு என்பது அவ