நேர்காணல் வாசிப்பு

 நேர்காணல் வாசிப்பு

        அரும்பு சுப்பிரமணியன் அவர்களின் நேர்காணலை வாசித்தேன். ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளரில் ஒருவர் அரும்பு சுப்பிரமணியன். இதுவரை அவரது மொழிபெயர்ப்புகள் எதையும் வாசித்ததில்லை. ஆனால், இந்த நேர்காணலில் அவர் மொழிபெயர்ப்பு குறித்து குறிப்பிட்டவையும் மொழிபெயர்ப்பு வாசிப்பு குறித்து கூறியுள்ளனவும் முக்கியமானவை. மொழிபெயர்ப்பு வாசிப்பு என்றல்லாமல் பொதுவாகவே வாசிப்பில் மிக எளிமையான வாக்கியங்களால் மட்டுமே எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலைத் தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை. இடையிலேயே சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனைக் களையும் வகையில் மூல படைப்பில் உள்ளவாறு நெடிய தொடரமைப்பைத் தான் தனது மொழிபெயர்ப்பில் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.‌

       மொழிபெயர்ப்பின் போது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு பின் வேறொரு மொழியைச் சென்றடைவதைக் காட்டிலும் அந்த நூல் எழுதப்பட்ட நேரடியான மூல மொழியிலிருந்து பெறு மொழிக்கு மாற்றப்படுவது பல வகைகளில் அந்தப் படைப்பின் நுணுக்கங்களை உணர வழியாக அமையும். அரும்பு சுப்பிரமணியனைப் பொருத்தவரை ரஷ்யாவில் தனது உயர்கல்வியை நிறைவு செய்தவர், ரஷ்ய மொழி பயிற்றுனர், உரையாளர் என பல வகைகளில் செயல்பட்டிருப்பதால் அந்நாட்டின் கலாச்சாரத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார். இது மொழிபெயர்ப்பின் போது பெரியளவில் கைகொடுக்கக்கூடியது. புனைவுகளை மொழிபெயர்க்கும்போது புனைவுகளுக்குள் வரும் நிகழ்வுகளையும் சேர்த்தே மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. அந்நிகழ்வுகளை மொழிபெயர்க்க முன்வரும் போது அவை மொழியாக்கமாக மாறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு. ஆகையால் மொழிபெயர்ப்பாளர் அந்நிகழ்வுகளை மொழிபெயர்க்கும் போது இரண்டு மொழிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனைச் செய்ய வேண்டியுள்ளது.

       மொழிபெயர்ப்புக்கான தேர்வு என்பது ஒரு மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பு பயணத்தில் முக்கியமான இடம்பெறுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியை மொழிபெயர்த்த போது நடந்த சம்பவம் ஒன்றையும் இந்நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார். சில புத்தகங்களை வாசிக்கும் போதே சில இடங்களைக் கடக்க முடியாமால் அது பற்றிய சிந்தனை நம்மை ஆக்கிரமிப்பதுண்டு. அப்படிப்பட்ட பகுதிகளை மொழிபெயர்க்கும் போதைய மனநிலையை மொழிபெயர்ப்பாளர்கள் அனுபவிக்கின்றனர் என்பதையும் இந்நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார். மொழிபெயர்ப்பாளர்களுக்கு இரு மொழி இலக்கணங்களிலும் போதிய அளவு பயிற்சி அவசியம். இலக்கண வகைகளுக்கேற்ப சொற்களின் வகைகளைப் பிரித்து அவை பயன்படுத்தப்படும் விதத்தைக் குறித்த செய்திகளையும் இந்நேர்காணலில் காண முடிகிறது.

       இந்நேர்காணலை வாசித்ததன் வழி அரும்பு சுப்பிரமணியன் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் '32 ஆகஸ்ட்' படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் ஆர்வம் வந்துள்ளது. 

      ஜப்பானிய எழுத்தாளர் யோகோ ஒகாவாவின் நாவல் தமிழில் லுபுனா லினானி மூலம் நினைவுகளின் வேட்டைக்களம் என ஜப்பானிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியன.

      அரும்பு சுப்பிரமணியனின் நேர்காணல் இணைப்பைத் தருகிறேன். வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள்.

-அழகுராஜ்


https://share.google/az7QVIxS16EYHorMI

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"கவிப்பேரரசர்களின் கவியமுதம்" நூலறிமுகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

கரப்பான் அரசியலில் எச்சரிக்கை தேவை -அழகுராஜ் ராமமூர்த்தி

தேடல் பறவை