நரகவாசிகளின் வியர்வை -தீனன் மாந்தர்கள்: இளைஞன், கண் தெரியாதவர், பூக்கடைக்காரன், பிச்சைக்காரி, போலீஸ், மனிதன் 1,2,3 இடங்கள்: வீட்டின் அறை, வீட்டு வளாகம், சாலை, சிறுவர் பூங்கா காட்சி-1 வீட்டின் இருண்ட அறையில் அதிகாலைப் பொழுதில் பழைய சுவர்கள் தூசடைந்த இருண்ட அறையில் ஜன்னலில் கட்டப்பட்ட துணித் துளைகள் வழியே சூரிய ஒளி கற்றைகளாக மேசையின் மீது விழுகிறது. மேடையின் நடுவே மிகவும் முன்னே வைக்கப்பட்ட மேசையின் மீது பாதி நிரம்பிய Syringe, பிளாஸ்டிக் கவரில் இருக்கும் Needle, காலியான மருந்துக் குப்பி, ஊசி போடுவதற்கான கயிறு உள்ளது. கருப்பு வார் பனியன், டிராக் பேண்ட் அணிந்த 20 வயதுடைய ஒரு இளைஞன் மேசைக்கு இடதுபுறம் தள்ளி மேடையின் நடுப்பகுதிக்கு சற்று ஓரமாக போடப்பட்ட சோபாவில் அமர்ந்தபடி, நேரே வைக்கப்பட்டிருக்கும் தொலைக்க்காட்சியின் சேனல்களை தொடர்ந்து மாற்றுகிறான் (சோபா பார்வையாளர்களை நோக்கி உள்ளது). தொலைக்காட்சியில் பக்தி நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள் மாறுகின்றன (இளைஞனின் முகத்தில் படும் தொலைக்காட்சி வண்ண ஒளிகள் மாறுவதை மட்டுமே பார்வையாளர்கள் காண்கின்றனர்). பின்னணியில் சேனல்கள் மாறும் இரைச...
கருத்துகள்
கருத்துரையிடுக