வாழ்க வாழ்க

 வாழ்க வாழ்க - இமையம்



எழுத்தாளர் இமையம் அவர்களுடைய எழுத்து எங்கும் நகரவிடாமல் என்னை வாசிக்க வைக்கக்கூடிய அளவு வசீகரத் தன்மை வாய்ந்தது. வாழ்க வாழ்க எனும் இந்த நாவல் தமிழக அரசியலின் புனைவு. இலக்கியங்கள் வரலாற்றைப் பதிவு செய்கிறது என்கிற கூற்றுக்கு முழுக்க முழுக்க பொருந்தக்கூடியதாக இந்த நாவல் இருக்கிறது. தமிழக அரசியலின் நிலையை பதிவு செய்யும் வரலாற்று ஆவணம் என்று கூட இந்த நாவலௌ கருதலாம். பெண்கள் பணத்திற்கும் சேலைக்கும் கட்சி பிரச்சார கூட்டத்திற்கு செல்வதையும் அங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களையும் விவரிப்பதாக இந்த நாவல் நகர்கிறது. சாதி எனும் பிரிவினை பொதுத்தளத்தில் எவ்வாறு மேலோங்கி இருக்கிறது என்பதையும் பெண்கள் கட்சிக்கூட்டங்களில் பெறுகின்ற துன்ப சம்பவங்கள், திருட்டு, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு, கட்சிக்கூட்டத்திற்கான நிலம் எவ்வாறு மாற்றப்பட்டது என்பனவற்றையும் அழகாக சித்தரித்து இருக்கிறார்.. எந்த ஒரு கவர்ச்சிமிகு பொருளும் காலம் சென்றவுடன் சலிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு அந்த மேடை ஒப்பனையை ஒப்பிட்டு பார்க்கலாம். அதனைக் கடந்து இதனை ஒருவகை பிரச்சார இலக்கியம் என்கிற கோணத்திலும் அணுக போதுமான வெளி உள்ளது..


                                  -அழகுராஜ் (18.08.2021)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்