குல்லா கதைகள் - வாசிப்பு

றாமானந்த சித்தர் எழுதிய குல்லா கதைகள்  (சாஹித்தியம் தொடர்பானவை) - உயிர்மை மின்னிதழ், மே -2023.

    
றாமானந்த சித்தரின் இந்த குல்லா கதைகள் அனைத்தும் எழுத்தைத் தொழிலாக, விருப்பமாக கொண்டோரின் வாழ்க்கையில் இயல்பாக நிகழும் நிகழ்வுகளை பகடி தொனிக்க பேசி ஆனந்திக்கிறது.


1. இலக்கியாசிரியர்களின் பிரக்ஞைக்குள் எப்படியோ தீர்க்கமான பின்னாளுக்குரிய பொருத்தமான காட்சிகள் வந்துவிடுகிறது. இது எப்போதாவது நிகழும் ஓர் தூமகேது வீச்சு. ஆனால், அதைப் பிடித்து கொண்டு திரியும் ஜோசியக்கார மனநிலையுடன் பிணையும் பெருவிருப்பங்களின் பகடிமொழியை தீர்க்கதரிசியின் கீறிட்டு எழுதும் பேனாவில் றாமானந்த சித்தர் எழுதியுள்ளார்.


      2. இலக்கிய உலகின் சர்ச்சைகளுக்குள் சிக்கி தன் நாள்படித்தான வேலைகளை செய்யும் மனநிலையை இழப்பது றாமானந்த சித்தரின் அடிக்கடி வழக்கம். திடீரென உதிக்கும் ஞானோதயத்தால் மட்டும் என்னத்தை சாதிக்கப் போகிறார். கவிஞர்களிடம் கதாசிரியர் பாணியில் பழகுவதைக் காட்டிலும் தான் கதாசிரியர் ஆக வேண்டியதே உசிதமானது.


      3. தமிழைப் படிக்கும் குறிப்பாக தொல்காப்பிய ஆய்வு செய்யும் ஒருவரிடம் நாவலைக் கொடுக்கலாமா? வாசிக்க கொடுப்பதை தவிர்ப்பதே நலம்.  கொடுத்தால் என்ன ஆகுமோ அதுதான் நடந்திருக்கிறது. So sad.


      4.போலிக் கணக்கின் அடையாள இழப்புக்கு ஆட்பட்டு விட்டார் போல.. ஐயோ பாவம்.. வேண்டுமானால் சீதாவை வைத்து பணம் அனுப்பச் சொல்லி குறுஞ்செய்திகளைத் தட்டிவிட்டு லாபம் பெற்று இழந்த கடனை திரும்ப பெறும் யோசனை தான் இப்போது உதிக்கிறது.


       5.எது சன்மானம் என்ற இலக்கணத்தை சற்று மாற்ற வேண்டிய நேரம் அது. எப்படியோ அடுத்த புத்தகம் பதிப்புக்கு போனால் சரி தான்..


                                                  -அழகுராஜ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)