புத்தியைத் தீட்டு
புத்தியைத் தீட்டு
-ஆலங்குடி சோமு
கத்தியைத் தீட்டாதே – உந்தன்
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே – அதிலே
திறமையைக் காட்டு!ஆத்திரம் கண்ணை
மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு – உன்னை
அழித்திட வந்த
பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதை விடு!
(கத்தியைத்)
மன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா – இதை
மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல்
மறைந்தே போகுமப்பா!
(கத்தியைத்)
இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை
எண்ணிப்பாரு தெளிவாகும்!
நீதிநெறி கருத்துக்களையும் தத்துவ சிந்தனைகளுடனான சித்தாந்த கருத்துக்களையும் திரைப்பட பாடல்களின் வழியே கடத்தக்கூடிய ஒரு காலம் நம் தமிழ் திரைத்துறையில் இருந்தது. அப்படியான பாடல்களை கொடுத்தவர்களில் என்ற வரிசையில் தான் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், ஆலங்குடி சோமு ஆகியோர் வருகின்றனர். நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடலின் காட்சி வடிவத்திற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. மாணவர்கள் அதனை காணவும்.
1965ல் வெளியான விளக்கேற்றியவள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை
பாடலாசிரியர் ஆலங்குடி சோமு எழுதியுள்ளார். டீ.ஆர்.பாப்பா இசையில் டி.எம் .எஸ் இந்த பாடலை பாடியுள்ளார்.
ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்.
சிவகங்கை மாவட்டத்திலுள் ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
பாடலுக்கான காணொளி இணைப்பு 👇🏼


கருத்துகள்
கருத்துரையிடுக