உயிர்வகை
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.
-தொல்காப்பியர்
தமிழ் மொழியின் சிறப்புகளுள் ஒன்று இலக்கண அமைப்பு. எழுத்து, சொல்லோடு நிற்காமல் பொருளுக்கும் அகம் புறம் என பகுத்து இலக்கணம் வகுத்திருக்கும் மொழியாக தமிழ் இருக்கிறது. மேலேயுள்ள நூற்பா தொல்காப்பியத்தின் 1516வது நூற்பா ஆகும். அதில் புலன் செயல்பாடுகளைப் பொருத்து உயிரினங்கள் வகைபடுத்தப்பட்டு இருக்கின்றன.
 |
ஓரறிவு - மரம் |
 |
ஈரறிவு- நத்தை |
 |
மூவறிவு- எறும்பு |
 |
நான்கறிவு -தும்பி |
 |
ஐந்தறிவு - விலங்குகள் |
 |
ஆறறிவு-மனிதன் |
பாடப்பகுதியை கற்ற பின் மாணவர்கள் கீழேயுள்ள இணைப்பின் வழி விளையாடலாம்.
விளையாடுவதற்கான இணைப்பு 👇🏼
கருத்துகள்
கருத்துரையிடுக