18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
அசோகமித்திரனின் சிறுவயது வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய இந்த 18 ஆவது அச்சக்கோடு நாவல் கனமான வரலாற்று பின்னணியை கொண்டதாகவும் அதே சமயம் குழந்தைமன நினைவின் வாசலை திறப்பதாகவும் அமைந்திருப்பதால் புதுவித உணர்ச்சியின் தொற்றல் சாத்தியமாகிறது அசோகமித்திரன் தனது எல்லா கதைகளையும் வெறுமனே ஒரு காட்சியை சித்தரித்துச் செல்லும் தன்மையை வெளிப்படுத்துபவர் என்றாலும் கூட அவருடைய கதைக்குள் ஒரு விசித்திரமான பக்கம் ஒளிந்திருக்கும் இதற்கு தண்ணீர் நாவலை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள முடியும் அதேபோல இந்த நாவலின் சித்தரிப்பின் போது வரலாற்றோடு தனிமனித உணர்வு பாடுகளையும் சிறு பையனின் மன ஓட்ட சாகசத்தோடு ஆவணப்படுத்த வேண்டிய குறிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கியுள்ளார். தேசிய புத்தக டிரஸ்டின் (NBT) ஆதான் பிரதான் திட்டம் மூலம் இந்த நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதால் இது தன்னளவில் எழுதப்பட்டதன் பயனை அடையும் எனக் கொள்வதற்கான வெளி இருக்கிறது.
அசோகமித்திரன் இந்த நாவலை 1977-ல் வெளியிடுகிறார் 1975இல் பேனாவை ஊன்றுகோல் ஆனதும் என்கிற தலைப்பில் ஹிந்தி பத்திரிக்கை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் கதைக்குள் கலாச்சார சார்பு இருக்க வேண்டும் என்றும் அந்த கலாச்சார சார்பாக ஜீவனுடைய தாக்குகிறது என்றும் எழுதியிருக்கிறார். அதன்படி இந்த நாவலில் கலாச்சார கூறுகளைத் தனித்தனியே பகுத்து அடுக்குவதோடு அதன் பின்னணியத்தையும் நோக்கி பார்க்கும் வாசலை லேசாக அசோகமித்திரன் திறந்து வைத்திருக்கிறார். பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்திரபாத்தில் இருந்திருக்கின்றனர் என்பதற்கான அத்தாட்சியாகவும் சமகால வாசிப்பில் உயிரோட்டம் கொடுக்கக் கூடியதாகவும் கோடு பிடித்தார் போல் இன்னாவல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்கள், தெலுங்கர்கள், தமிழ் முஸ்லிம்கள், சட்டைக்காரர்கள், பாதிகாரர்கள், அகதிகள், லம்பாடி முஸ்லிம்கள் (மார்வாடிகள், ரசாக்கர்) என்று பலவிதப் பெயர்களில் ஒரே பிரிவினரையும் வேறுபட்ட பிரிவினையும் நுண்ணிய தன்மையில் வேறுபடுத்தி காட்டியிருப்பதை இந்நாவலின் குறியீட்டுப் பார்வையாக கொள்ளலாம்.
சின்ன பையனும் பாத்திர சித்தரிப்பும்:
சந்திரசேகர் என்ற பையனை சுற்றியுள்ள மதம் மொழி அரசியல் விளையாட்டு திரைப்படம் பழக்க வழக்கம் இருப்பிடம் என பல்வேறு கோள்களின் பின்னலாக இந்த நாவல் அமைந்திருக்கிறது
லாரா, நாகரத்தினம், பியாரி பேகம், ஜூலி என்ற பெண்களுடனான தொடர்பை தனிப்பட்ட சந்திப்பின் போதான உணர்வுகளோடும் பொது வெளிப்பார்வையின் கோணங்களோடும் திரைப்பட பெண்ணின் உருவத்தோடு பொருத்திப் பார்க்கும் சிறுவனின் பாலி
பால்ய சிந்தனை ஏதோ ஒரு தொடுதலை நிகழ்த்துகிறது. நம்மைப் பற்றிய நினைவு பரப்பு சிந்தனை ஓட்டங்களை சிறிது நேரம் நம்முன் நிறுத்தி வைக்கக்கூடிய செயல்பாடு நிகழ்வதை ஓரளவு உணர முடியும்.
எல்லா மனிதர்களுமே சிறுவயதில் தன்னை ஒரு கதாநாயகனாக கட்டமைப்பதற்கான வாய்ப்புகளையும் திறனையும் நோக்கி ஓடுவர் அதே பாதையில் சந்திரசேகரன் செல்வதில் வியப்பு ஏதும் இல்லை என்றாலும் கூட அசோகமித்திரனின் படைப்பில் அதை வெளிப்படுத்திய தன்மை பகோடியோடு சேர்ந்து ஒவ்வொருவருக்கும் அவரவர் சிறுபிராய நினைவுகளை கிளறச் செய்கிறது. நண்பர்கள் சந்தானம் மற்றும் மாரிஸுடன் சந்திரசேகர் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டானது கிரிக்கெட் தன்மை பெறாமல் டென்னிஸ் தன்மை பெற்றிருக்கும் சூழலை கராச்சி திசை பவுலிங் என்று எள்ளல் படம் சொல்லி இருக்கிறார் அசோகமித்திரன். சரியாக விளையாடத் தெரியாத சந்திரசேகர் ரங்க இராமானுஜம் மூலம் விளையாட்டிற்குள் சென்று தன்னுடைய எதிரியாக இருக்கும் கிருஷ்ணசாமியோடு பழகுவதும் பின்பு தன்னுடைய அணிக்கு கேப்டன் ஆகுவதும் நாசிர் அலிகான் மூலமாக விளையாட தெரியாத சந்திரசேகர் வலை பயிற்சிக்குள் அவமானப்படுத்தப்படுவதுமான வரிசையான நிகழ்வுகள் ஒரு சாதாரண பையனின் கிரிக்கெட் ஆட்ட வரலாற்றையும் அதில் அவன் நிகழ்த்தியுள்ள சாகசங்கள் மற்றும் பெற்ற அவமானங்களின் விவர கோர்வையாக அடுக்கப்படுகிறது.
பள்ளி காலத்தில் கோஷ்டி மோதல் இல்லாமல் பள்ளிப்படிப்பு முழுமை அடையாது. அடிக்கடி நான் இந்த கோஸ்டி பிரச்சனையை பற்றி நினைக்கும் போதெல்லாம் சிரிப்பதுண்டு. அன்றைய நாளில் நாம் வெறுத்தவர்கள், மிகவும் முனைப்புடன் உலகப்போர் போல ஒரு திட்டத்தை வடிவமைத்து இவனை தாக்க வேண்டும் என்று வடிவமைத்த திட்டங்கள் முதலானவை எல்லாம் இப்போது எல்லோருக்கும் வேடிக்கையாகவே இருக்கும். நட்பே துணை படத்தில் ஆதி கதாபாத்திரத்திற்கு சீனியராக இருக்கும் ஒருவனை அவனது எதிரியாக காண்பித்து பின்பு டீக்கடையில் அவனை ஆதிக்கு உதவுபவனாக வரச் செய்வதன் மூலம் எதார்த்த நிலை உணர்த்தப்பட்டு இருக்கும் அதேபோன்றது தான் பள்ளி காலத்தில் நடந்த மோதல்கள், இப்படியான காட்சிகளுக்கான அடித்தளம் பள்ளி வாழ்க்கையிலிருந்தே அதிகம் பெறப்படுகிறது. சந்திரசேகரின் அத்தகைய நிலையைச் சொல்லும் அசோகமித்திரன் காண்ட் ஆப் மானர் கிரிஸ்டோ என்கிற நாவலையும் அந்த நாவலில் 30 வருடம் கழித்து வஞ்சம் தீர்க்கும் அடித்தள கதை ஓட்டத்தையும் குறிப்பிடுகிறார்.
சந்திரசேகர் என்ற பையனின் வாழ்க்கையில் இருந்து இந்த நாவல் பார்க்கப்படுவதால் நாவலின் கோணம் நம்பகத்தன்மையோடு கடத்துவது சவாலான ஒரு பணியாகும். ஆனால் அசோகமித்திரன் அவற்றையெல்லாம் கடந்த நேர்த்தியை இதில் வெளிப்படுத்தியதோடு சொந்த மொழி தெரியாத சிறுவர்களற்ற பிரதேசத்தில் இருக்கும் தனிமை கால பால்ய வேட்கை, விளையாட்டு, தற்கொலைக்கு நேரான விரக்தி மனம், பாடல் போன்ற கலை நய உணர்வு அரசியல் பார்வை ஆகியவை தமிழ்ப் பண்பாட்டு அம்சத்தை தன்னுள் கொண்டுள்ள ஒருவனுக்கு எப்படியானதாக அமைந்துள்ளது என்பதை அறியலாம். ஆடைக் கலாச்சாரங்களைப் பின்பற்றுவதில் உள்ள முறைமையை கதைத்தன்மை சிதையாமல் கையாண்டிருப்பது இந்நாவலின் சிறப்புக்குரிய பகுதி.
பாரதிக்கு எட்டயபுரத்தில் நினைவிடம் அமைக்க அப்பா பணம் வசூலித்து அனுப்பியதையும் பாரதி பாடலை தன்னுடைய கெமிஸ்ட்ரி ஆசிரியருக்கு பாடி காண்பித்ததோடு அவருக்கு கற்றுத் தந்ததைத் தொடர்ந்து வரும் உரையாடல் செகந்திராபாத் நகரில் இருந்த தமிழன் ஒருவனின் சராசரி அரசியல் பார்வை என்பது தெளிவாக தெரிகிறது. காந்தியின் இறப்பின் போது தனது சிறுவயது குழந்தைமையில் இருந்து விடுபட்டு 18வது வயதெனும் அட்சக்கோட்டைத் தாண்டிய உணர்ச்சிவசத்திற்கு சந்திரசேகரன் உட்பட்டது இந்நாவலின்
திருப்பு முனை.
வரலாற்று பிரக்ஞையுடனான புனைவு:
ரங்க ராமானுஜம் சந்தானம் மாரிஸ் போன்ற ஆத்ம நண்பர்களுடனான கதையோடு பிணைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த நாவல் 1940இல் இருந்த இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்திரபாத் நகரங்களின் வரலாற்று நிலையை சித்தரிக்கும் பாங்கினை ஏற்றிருக்கிறது. சந்திரசேகர் அப்பா ரயில்வே துறையில் வேலை பார்க்கிறார் என்கிற இடம் குறிப்பிட்டு பார்க்க வேண்டியது. இன்றைய தேதியில் ரயில்வே துறையானது அரசின் வசம் இருக்கிறது ஆனால் இதற்கு முன்பு தனியாரின் கட்டுப்பாட்டில் ரயில்வே துறை இருந்தது தான் முந்தைய வரலாறு இப்போது அரசின் வசம் இருக்கக்கூடிய ரயில்வே துறையையும் தனியாரின் வசம் ஒப்படைக்க அரசு தத்தளித்துக் கொண்டிருப்பதெல்லாம் நாம் அறிந்ததே. அப்போது செயல்பாட்டில் இருந்த கம்பெனியாக மெட்ராஸ் அண்டு சதன் மராட்டா எனப்படும் எம் எஸ் எம் தனியார் கம்பெனியை சொல்லலாம் 1950 இல் தான் இரயில்வே துறை அரசுக்கு சொந்தமானதாகிறது. ஹைதராபாத் நிஜாம் அரசு இந்திய ஒன்றியத்தில் ஒன்றி போகாமல் இருந்த செய்திகளை குவித்து காண்பிக்கும் இந்த கதையில் இந்திய அரசுக்கு சொந்தமல்லாத கம்பெனி அல்லது கார்ப்பரேட் ரயில்வே அமைப்பு மக்களது வாழ்வோடு இணைவுற்று இருக்கும் தன்மையை கூரிய வாசிப்புடன் அணுக வேண்டும் என்பது அந்த பகுதியினை வாசிக்கும் போதே தெரிகிறது. ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் இன்று முன்னெடுக்கப்படுவதை போல அன்றைய காலகட்டத்தில் ரயில்வேயை முன்னிட்டு எந்த ஒரு மோதலும் நிகழாமல் இருந்ததற்கான பின்னணி காரணம் தான் இந்த தனியார் துறைசார் செய்திகள்.
ஆந்திரா தெலுங்கானா பிளவு பின்னணி செய்திகளின் தொடக்கம் “நரசிம்ஹராவ் என்ற பையனை ஆந்திராகாரன் எனச் சொன்னால் அவனுக்கு கோபம் வரும் தெலுங்கானாகாரன் என சொல்ல வேண்டும்” என்பதில் ஏற்படுகிறது. அதனையொட்டி வாசிப்பின் போதான பல இடங்களில் நாம் அதைப் பொருத்திப் பார்த்து வாசிக்க வேண்டிய அவசியத்தை அசோகமித்திரன் நாசூக்காக அமைக்கிறார். நிஜாம் அரசின் வீழ்ச்சிக்கு பிந்தைய காலத்தில் மகாராட்டிரம் , ஆந்திரப் பிரதேசம், கர்நாடக பிரதேசம் அதன் பகுதிகளை பங்கிட்டுக் கொண்டன. அக்காலத்திய செகந்திராபாத் நகர அமைப்பு சந்து பொந்துகள் நிறைந்தது என்பதை களவர சமயத்தின் போது நிகழும் தப்பித்தலில் காணலாம். “மொகஞ்சதாரோ நகரத்தின் சிறப்பு பாதாள சாக்கடை என்றால் செதந்திரபாத் நகரத்தின் சிறப்பு அதன் சந்து பொந்துகள் தான்” என்ற வரி மூலம் நகரத்தினுடைய அமைப்பிகளை மேலும் கவனிப்புக்கு உள்ளாக்கலாம்
இந்திய நகரங்களின் பொருளாதாரச் சூழலில் இருந்து ஹைதராபாத் மற்றும் சுதந்திரபாத் நகரங்களின் பொருளாதாரச் சூழல் வேறுபட்டவையாகவே தனித்து காணப்பட்டுள்ளது. ஒப்பீட்டு மதிப்பில் 100 ரூபாய் இந்திய நாணயம் 116 ரூபாய் 10 எட்டு தம்படி என்ற அளவிலான ஹைதராபாத் நாணயங்களுக்கு சமம். நாணயங்கள் பொருளாதாரம் என்று வரும்போது வங்கிகளையும் குறிப்பிட்டாக வேண்டும் இந்த நகரங்களில் தனியார் வங்கிகள் தொடங்கப்பட்டதும் அவை காணாமல் போனதும் நிகழ்ந்திருப்பதை சந்திரசேகரின் அப்பா பணம் போட்ட செயிலோர்/அர்பத்நாட் வங்கி காணாமல் போனதன் மூலமாகவும் சந்திரசேகரின் தாத்தா இதே போல ஏமாந்த காரியமும் நாவலில் இந்த வங்கிகளின் ஏமாற்று மோசடி குடித்த பகுதிகளாக இடம் பெற்றுள்ளது. சீட்டு போடும் கம்பெனிகள் ஏமாற்றி செல்வது போல அன்றைய காலகட்டத்தில் இந்த நகரங்களில் தனியார் வங்கிகள் ஏமாற்றக்கூடிய செயல்பாடு நிகழ்ந்திருப்பதாக நாம் கருதலாம்.
ஹைதராபாத் சுதந்திரபாத் நகரங்களில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டையும் இந்தியாவினுடனான இணைப்போடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அரசியல் களத்தில் இரட்டை நகரங்களின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு, பாகிஸ்தான் ராணுவத்தின் உடைய பாணியிலான ராணுவப்படை அதிகரிப்பு, இந்திய ராணுவத்தினை அனுமதிக்காத போக்கு முதலானவை நிஜாம் அரசுக்கு அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான பிரச்சனையின் அடித்தளம். இனவாதம் ஓங்கும் வழியை அடைக்கும் செயல்பாடாக இந்தியா மேற்கொண்ட செயல்பாடென இதனை கருதலாம். இனவாத மூலமாக மணப்புமிகு ஹைதராபாத் நகரம் ரசிக்க இயலாத சிக்கலும் வன்முறையும் கலவரமும் கொண்டதாக மாறியதன் எழுத்து காட்சியை இக்கதையில் பார்க்கலாம். திட்டத்திட்ட காஷ்மீரின் எழிலோடு மோதும் சமரசமற்ற யுத்தப் போக்கை இன்றைய உதாரணமாக காட்டலாம். அரிசிக்கு பதிலாக துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர் இந்தியாவோடு ஹைதராபாத் சமஸ்தானம் இணைய வேண்டும் என்று இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை கொள்ளும் அளவு மூர்க்கமும் லம்பாடி பெண்ணை நிர்வாணப்படுத்தி தவறாக நடந்து கொள்ளும் செய்கைகளும் அரங்கேறிய வன்முறையின் விளைவு இந்த நிஜாமரசு சாய்ந்தது என்பதை நாம் கொள்ளலாம் இதனை இலங்கை அரசியலோடு ஒப்பிட்டு அளவில் நோக்குவதற்கான சில கூறுகள் உண்டு
இந்து முஸ்லீம் மாட்டு பிரச்சனையின் பல்வேறு வடிவங்களின் ஒரு வடிவத்தை இக்கதையின் ஒரு சிறு பகுதி மூலம் அறியலாம். காங்கிரஸ் எதிர்ப்பு கம்யூனிச நிலைப்பாடு முதலியன இந்த அரசியல் நடவடிக்கையுடன் நாவல் புனைவில் முக்கியமானதாகும். ரஷ்வியின் இனவாத தலைமையின் கீழ் இயங்கும் ரஜாக்கர் படையானது தமிழர்களையும் இஸ்லாமியர் அல்லாதவரையும் லம்பாடி அகதிகளையும் ஒடுக்கிய நிகழ்ச்சிகள் இரத்தம் தோய்ந்தவை. இதில் வதர்பா நாட்டு இஸ்லாமிய அகதிகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நிஜாம் அரசுடனான படைகளாக போலீஸிற்கும் மேலான கட்டற்ற அதிகார பலமுடைய செயல்பாட்டினை செய்யும் சக்தி கொண்ட ரஜாக்கர் படையை இன்று இனவாதத்தையும் மதவாதத்தையும் முன்வைத்து செயல்படக்கூடிய கொடூர இயக்கங்களோடு நாம் ஒப்பிட்டு பார்க்கலாம்.
காந்தியின் மறைவுக்கு துக்க மனிஷ்டிக்கக்கூடிய உணர்வு நிலை கொண்டதாக நிஜாம் அரசு இருந்தாலும் ஹைதராபாத் இஸ்லாமியரும் அவரை இந்துமத தலைவராகவே பார்த்திருக்கின்றனர். இந்துக்கள் அவரை இஸ்லாமிய ஆதரவாளராக பார்த்ததும் அவர் கொல்லப்பட்ட பின்னணியையும் இந்த இடத்தில் நினைவில் நிறுத்துவதும் அவரது நிலை குறித்த சிந்தைகளில் ஆள்வதும் நாவல் வாசிப்பைக் கடந்த ஓர் சிந்தனை தளமாக எனக்குள் உருகொண்டது.
லான்சர் பாரக்ஸ் நகரம்:
லான்சர் பாரக்ஸ் நகரம் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சிப்பாய்கள் தங்குமிடமாக காணப்பட்ட செய்தியை நாவலின் ஆரம்ப பகுதிகளிலேயே நாம் பார்க்கலாம். 1940ல் ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பாக மாற்றம் பெறும் அந்த இடத்தில் தான் நாவலின் கதாபாத்திர உறைவு காணப்படுகிறது. நிஜாம் அரசானது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கும் அவர்களுடைய அரசிற்கும் ஆதரவாக செயல்பட்டது கண்கூடாக தெரியும் காரியம். ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்கள் இருந்த இடத்தில் காங்கிரஸார் இருக்கும் நிலையை ஏற்க முடியாததை ஒட்டி லான்சர் பராக்ஸில் உள்ள செயல்பாடுகளை அறிதல் வேண்டும். லான்சர் பராக்சில் உள்ள கல்லறை குறித்த யூகத்தில் அது பிளேக் பெரியம்மை பாதிப்பில் இறந்தவர்களது கல்லறையாகவோ அல்லது ராணுவ வீரர்கள் கல்லறையாகவோ இருக்கலாம் என்ற யூகத்தை தன்னுடைய கதைவாயிலாக அசோகமித்திரன் வெளிப்படுத்துகிறார்.
உடை கலாச்சாரமும் பயண விவரங்களும்:
தமிழர்கள் எந்த சாதியாக இருந்தாலும் செகந்திராபாத் நகர வாசத்தில் தொப்பியும் கோட்டும் போட்டிருந்துள்ளனர். பேராசிரியர்கள் தலைப்பாகை கட்டியும் முஸ்லிம்கள் பைஜாமா அணிந்தவர்களாகவும் சட்டைக்காரர்கள் இம் செய்து கொள்பவர்களாகவும் அதே போல முஸ்லிம் நாயுடு பையன்களோடு தமிழர்கள் இணக்கம் காட்டி உடை கலாச்சாரத்தில் திகழ்ந்ததைப் பார்க்கலாம். விடுதலை என்பது முஸ்லிம்கள் தாக்கக்கூடிய சூழல் ஏற்படும்போது இந்த உடை ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டுவதற்கு வசதியாக இருந்திருக்கிறது.
நிஜாம் அரசின் குடியுரிமை பெற்றவர்கள் இந்திய பகுதிக்கு செல்வதற்கு பயணச்சீட்டு ஆக அதாவது பாஸ்போர்ட் போன்று போலீஸ் பர்மிட் பெற்றிருக்க வேண்டும். குருசேத்திரம் படத்தில் வடிவேலிடம் தமிழ்நாடு போலீஸ் பாஸ்போர்ட் கேட்பார்கள் அதே காட்சி 1940களில் இந்தியாவிற்குள் அல்லது இந்திய பகுதிகள் சூழ தன் எல்லைகளை வைத்திருந்த ஹைதராபாத் செகந்திராபாத் பகுதியில் இருந்திருக்கிறது.
சைக்கிள் ஓட்டுவதற்கு சைக்கிளில் லைட் இருக்க வேண்டும் மற்றும் லைசன்ஸ் போர்டு இருக்க வேண்டும் இந்த முறை ஹைதராபாத் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அக்காலத்திய வழக்கம். லைசென்ஸ் போர்டானது ஹைதராபாத்தில் இரண்டு வகைப்பாடு. சிக்கந்தராபாத் லைசென்ஸ் போர்டு பித்தளை தகட்டில் ஆங்கிலம் தெலுங்கு எழுத்துக்கள் கொண்டதாகவும் ஹைதராபாத் லைசென்ஸ் போர்டு தகர தகட்டில் உருது எழுத்துக்கள் கொண்டதாகவும் இருந்திருக்கிறது இதில் எந்த லைசன்ஸ் இருந்தாலும் இரண்டு நகரங்களிலும் நாம் பயணம் செய்து கொள்ளலாம். நம்முடைய தற்போதைய போக்குவரத்து சட்டங்களின்படி இப்படியான பயணங்களுக்கும் சில விதிமுறைகள் மற்றும் வண்ண நிற போர்டுகள் உண்டு இந்த விதிமுறைகள் அன்றைய காலகட்டத்தில் நிஜாம் அரசாங்கத்திலும் இருந்திருக்கிறது.
சைக்கிள் லைசென்ஸ் போர்டு மட்டுமன்றி போலீஸ் சீருடை இயங்கு மொழி முதலியனவும் வேறுபட்டவையே சிக்கந்தரபாத் போலீஸ் ஆங்கிலம் தெலுங்கு மொழியை கொண்டு இயங்குபவர்கள் ஆகவும் காக்கி நிற சீருடை அணிந்தவர்களாகவும் காணப்படுவார் ஹைதராபாத் போலீஸ் கொண்டு இயங்குபவர்கள் ஆகவும் இருந்திருக்கின்றனர் இப்படியான வேறுபாடுகள் பல இவ்விரு நகரங்களுக்கும் இடையில் இருந்துள்ளதை கதை புலப்படுத்துகின்றது.
தொன்ம பிணைப்போடு முற்றடைதல்:
அவுரங்கசீப் மறைந்த பின் தக்காணம் அசப்ஜா என்பவன் பொறுப்பில் இருந்தது. 1724 இல் நிஜாம் அரசாக அவன் தன்னை அறிவித்து முடிசூட்டு விழா நடத்திய போதா சூஃபி ஒருவர் இரங்கி நின்ற சமயத்தில் அவருக்கு பூஞ்சைகள் பூத்த ஏழு ரொட்டிகளை வழங்கி இருக்கிறார் உடனே அந்த சூப்பி ஏழு தலைமுறைக்கு பின் உன் சந்ததி காணாமல் போகும் என்ற ஒரு துன்பத்தை சாபமாக விட்டுள்ளார். அச்சபத்தின் விளைவாக அவனுக்குப் பின்னான ஏழாவது தலைமுறையில் நிஜாம் அரசு வீழ்ச்சி அடைந்திருப்பதாக கருதப்படுகிறது.
18 ஆவது அச்சகோடு நாவலை வாசிக்கும் முன் அதிலுள்ள முடிச்சுகளை இனம் கண்டு அவிழ்ப்பதற்கு 1986ஆம் ஆண்டு அமுதசுரபி இதழில் அசோகமித்திரன் எழுதிய 18வது அடசக்கோட்டில் என்ற கட்டுரை உதவிகரமானதாக இருக்கும். சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை விடுதலைப் போராட்ட காலத்தின் நிகழ்வுகளை பேசுவது போல அதன் அடுத்த பரிணாம நிலையை இந்நாவல் உள்ளடக்கியுள்ளது. கோபல்லபுரத்து மக்கள் நாவலில் கி.ரா ரயில்வே, டார்ச் லைட், வானொலி முதலான அந்நிய காலணி ஆதிக்க பொருட்களின் உட்புகலை சொல்வது போல வானொலியின் தன்மையினை முதன்மைப்படுத்தி பத்திரிகைகளின் வருகைத் தடையை மீறிய தொடர்பு சாதனமாக வானொலி இருப்பதை இந்நாவல் பிரகடனப்படுத்துகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக