தென் தமிழக பயணம் விரிவும் ஆழமும் தேடி

     தென் தமிழகத்தின் தொன்மங்களை நோக்கி 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள் விரிவும் ஆழமும் தேடி ஒரு பயணத்தை ஒருங்கிணைத்தது. இந்த பயணத்தில் 25 நபர்கள் கலந்து கொண்டனர். கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில், வெட்டுவான் கோயில், சமண மலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டபின் காலை உணவு எடுத்துக் கொள்ளப்பட்டது.










      அடுத்ததாக, வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட இடமான கயத்தாறில் உள்ள கட்டபொம்மன் நினைவுத்தூணில் சில நிமிட உரையாடல் நிகழ்ந்தது. 









     கட்டபொம்மனின் நினைவு மணிமண்டபத்தைப் பார்வையிட்டதன் தொடர்ச்சியாக கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்று அங்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையை பார்வையிட்டதுடன் கட்டபொம்மனின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த வீமராஜாவுடன் கட்டபொம்மன் வரலாறு குறித்து பேசப்பட்டது.








     பாஞ்சாலங்குறிச்சியில் மதிய உணவை முடித்து விட்டு, ஓட்டப்பிடாரத்தில் உள்ள இந்திய விடுதலைப் போராட்டத்தின் சுதேசிய தலைவர்களுள் முக்கியமானவரான வ.உ.சிதம்பரனாரின் இல்லத்திற்கும் மேலறையில் உள்ள நூலகத்திற்கும் சென்று உரையாடல் நடத்தப்பட்டது.



     வ..உ.சிதம்பரனாரின் இல்லத்தைத் தொடர்ந்து எட்டயபுரத்தில் உள்ள தேசிய கவி பாரதியின் இல்லத்திற்கும் அவரது நினைவு மண்டபத்திற்கும் சென்று பயணம் மாலை நிறைவுற்றது. மனநிறைவுடன் அனைவரும் பயணத்தின் மகிழ்ச்சியை அனுபவித்தனர்.










கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்