சேர தாண்டவம் - பாரதிதாசன்

 



சேரதாண்டவம்( நாடகம்)

                                    -பாரதிதாசன்


     சேரதாண்டவம் எனப்படும் கூடிய இந்த நாடக நூலை எழுதியவர் நாம் அனைவரும் நன்கு அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், சேரதாண்டவம் எனப்படும் கூடிய இந்த நூலின் உடைய பொருள் சேரனின் கூத்து என்பது தான். கூத்து என்றால் நாடகம் என்று நாம் பொருள் கொள்ளலாம். அதாவது சேரனைப் பற்றிய நாடகம் என்பது தான் இந்த புத்தகத்தின் தலைப்பிற்குரிய பொருள். புத்தகத்தின் தலைப்பிலேயே இலக்கிய வகையை பாரதிதாசன் குறிப்பிடுவதே இந்த இடத்தில் நம்மால் காண முடிகிறது. சேர அரசன் ஆற்றலுக்கும் சோழ இளவரசி ஆதிமந்திக்கும் இடையில் இருக்கக்கூடிய காதலை கூறுவதாக இந்த இலக்கியம் படைக்கப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரம் இயல் இசை நாடகம் என படக்கூடிய மூன்று கூறுகளையும் சேர சோழ பாண்டியர் எனும் மூன்று அரசுகளையும் கொண்டதாக கருதப்படுகிறது. அதில் இந்த ஆட்டனத்தி ஆதிமந்தி கதை முக்கிய இடம் பெறுகிறது. அதனை நாடக வடிவில் பார்ப்பது ஒருவகை கூடுதல் இன்பம் தான். 


      ஒவ்வொரு மனிதனுக்குமே அகம் புறம் எனப்படக்கூடிய இருவகை வாழ்வு உண்டு. இந்த நூலில் சேர நாட்டு அரசனாகிய ஆட்டனத்தியின் அக வாழ்வை குறித்த செய்திகள் நாடகமாக உருப்பெற்றிருக்கிறது. பாவேந்தர் உடைய பாண்டியன் பரிசு போர் உள்ளிட்ட செய்திகளையெல்லாம் கூறும் வகையில் இருக்கக்கூடிய ஒரு நாடகம். சேரதாண்டவம் நூலில் சேரரும் சோழரும் இடையில் அரசியல் ரீதியான ஒற்றுமை ஏற்படுவதற்கு  அவசியம் என்ற ஒரு கருதுகோள் எழுந்தாலும், இந்த நூல் முழுக்க முழுக்க சேர அரசனுடைய அக வாழ்வையே மையப்படுத்தி இருக்கிறது. பாரதிதாசன் ஒரு சில இடங்களில் தான் விரும்பிய பெண்ணியத்தை நூலிழையில் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.


     பெரும்பாலும் அரசர்களை வீரத்தில் சிறந்தவர்களாகத் தான் பெரும்பான்மை இலக்கியங்கள் கூறுகிறது. ஆனால், இந்த நூலில் சேர நாட்டு அரசன் ஆட்டனத்தி காதல் மன்னனாகவும் சிறந்த நாடக கலைஞராகவும், வல்லமன் சிறந்த ஒப்புமை அழகு கலைஞராகவும் சித்தரிக்கப்படுகின்றனர். ஒற்றர்கள் மூலம் சோழநாட்டினைக் குறித்து அறிந்த ஆட்டனத்தி சோழ நாட்டு இளவரசியின் மீது பார்க்காமலே காதல் கொள்ள ஆரம்பிக்கிறார். காதல் எனப்படுவது மனிதனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு வருவதில்லையென்பதை, ஆட்டனத்தி கூத்துக் கலைஞராக இருக்கும்போதே ஆதிமந்தி காதல் கொள்வதன் மூலம் நிறுவுகிறார் பாவேந்தர். பின்பு இருவரும் சந்தித்து தங்கள் காதலை புலப்படுத்துகின்றனர். பின்பு சோழனின் மாமனார் ஆகிய இருப்பிட தலையார் மூலம் சோழனுக்கு ஆதிமந்தியின் காதல் புலப்படுகிறது. சேர நாட்டுக்கும் ஆட்டனத்தி என் காதல் அறிவிக்கப்பட்டு இருவருக்கும் இடையிலான திருமணம் என்ற நிகழ்வு மாறுபட்டதாக சேர நாட்டில் நடைபெறாமல் சோழ நாட்டில் அமைகின்றது. இந்த திருமணத்தை குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் அது சாதாரணமாகவே இந்த நூலில் எழுதப்பட்டிருக்கிறது.

                                      -அழகுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

ஆவணப்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - ரித்விக் கட்டக் (தமிழில் -தீனன்)