தற்கொலை எண்ணம் - ரா. அழகுராஜ்
- ரா. அழகுராஜ்
பாலத்தை நோக்கி பயணப்பட்டான்
குதித்து நீத்து போக....
நதியில்,
மீன்களின் எதிர்நீச்சல் தெரிந்தது...
மீண்டு வந்து சேர்ந்தான்....
கயிறை வாங்கி முடித்தான்..
கழுத்தில் தொங்க போட....
மரத்தில்,
பறவையின் ரீங்காரம் கேட்டது....
ஊஞ்சல் கட்டி அமர்ந்தான்....
களைக்கொல்லி வாங்கி நடந்தான்.....
தன் உயிரைக் கொல்ல...
விளைநிலத்தில்,
நிலவிய பசுமையை முகர்ந்தான்
உலவிய பூச்சியை கொன்றான்..
லாரியைத் தேடி பயணித்தான்...
பாய்ந்து ஓய்வு பெற்றிட...
நெடுஞ்சாலையில்,
நெடுந்தூரத்திலொரு சத்தம் லொள் லொள்...
நாயுடன் தானும் நடந்தான்...
ரயிலைப் பார்க்க சென்றான்...
பாதையில் படுத்து தூங்க...
ரயில் பாதையில்,
வீரமாய் துள்ளிய கன்றுக்குட்டியை,
ஓரமாய் நின்று கவனித்தான்....
- அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக