மதில்கள் - வைக்கம் முகமது பஷீர் மொழிபெயர்ப்பு- சுகுமாரன்
மதில்கள் - வைக்கம் முகமது பஷீர் மொழிபெயர்ப்பு- சுகுமாரன்
வாழ்வில் நடந்தவற்றை அதீத கவிநடையோடு உற்றுப்பார்த்து கதைகளாக வாசிக்கத் தரும் ஒரு படைப்பாளி வைக்கம் முகமது பஷீர். அவர் எழுதிய மதில்கள் எனும் இந்த குறுநாவல் அவர் விடுதலைப் போராட்டக் காலத்தில் சிறையில் இருந்த போது எழுதப்பட்டதாகும். இந்த நாவல் எழுதப்பட்ட சூழல் மற்றும் பின்னணி நாவல் திரைப்படமான பின்னணி ஆகியவை இந்த பதிப்பில் இணைக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு.
சிறையில் வாழும் கைதி அங்கு எப்படியெல்லாம் பொழுதைக் கழிக்கிறான். சிறை என்கிற ஒரு வட்டத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனும் வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்குள் ரகசியம் என ஒன்று இருக்கிறதா ஒவ்வொரு வார்த்தைகளும் சம்பவங்களும் எப்படியெல்லாம் பரவிச் செல்கிறது என்பதை எல்லாம் நாவல் பேசுகிறது. சிறையில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது. அதில் பஷீர் அவர்களுக்கு ப்ளேடு மற்றும் கத்தி வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் என சிறையின் ஒவ்வொரு பக்கத்தையும் தாள்களில் பக்கங்களாக பதிவு செய்த கதை தான் இந்த நாவல். போலிஸ், ஜெயிலர், வார்டர் என ஒவ்வொரு கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் பஷீருக்கும் இடையிலான நெருக்கம், இயற்கை மீதான அவரது ஆர்வம், மரணத்தை சந்திக்கும் விதம், சிரிப்புக்கான விளக்கம், மதிலைத் தாண்டி இருக்கும் நாராயணி என்ற பெண்ணுடனான தொடர்பு என சிறைக்குள் சென்றதில் இருந்து வெளிவந்தது வரையிலான செய்திகளை பஷீருக்கே உரிய தத்துவம் மற்றும் கவிநயத்தோடு இந்த நாவல் புனையப்பட்டு இருக்கிறது.
- அழகுராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக