வற்றிய மார்புகள்

 


விமர்சனமாகவும் வாழ்த்துகளாகவும் பயனுறு பனுவல் நிகழ்ச்சியில் முன்வைத்த கருத்துக்கள்:


ஞானஸ்நானம் கன்னியாஸ்திரி இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.


சில இடங்களில் ஒற்றுப்பிழை காணப்படுகின்றது.


குச்சுவல்லியிடம் ஜெனி குறித்த தகவல்கள் பானுவின் மூலம் தான் வந்து சேர்ந்தது யதார்த்தக் களத்தை மாற்றுகிறது.


ஆரம்ப நிலை வாசகர்களுக்கு வாசிப்பதற்கு கடினமான வகையிலான அமைப்பு


ஆணை அல்லது பெண்ணை தவறாக சித்தரிக்கக்கூடாது. அவர்களுக்குரிய தனிப்பட்ட சுதந்திரம் பேசப்பட்டு உள்ளது.


போராட்டத்தைக் குறித்த தகவல்கள் சிறப்பாக இடம்பெற்றது.




குச்சுவல்லி மூலம் சமூகத்தில் மக்கள் இன்னும் நம்பும் பிற்போக்குத் தனம் வெளிப்பட்டுள்ளது.


செங்கல் சூளை பற்றிய கருத்து வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாச நாவலில் குழம்பு வைப்பதைச் சொல்வதைப் போல சொல்லப்பட்டுள்ளது. 


ஒரு புளியமரத்தின் கதையைப் போல இறந்த கால நிகழ்கால கதை ஒருங்கே பேசப்பட்டு இருக்கிறது. கடந்த வருடம் வெளியான வேல்முருகன் இளங்கோவின் ஊடறுப்பு நாவல் போல இந்த கதையிலும் கதாபாத்திரமே கதை எழுதுகிது. 


எழுத்தாளரின் முதல் நாவல் என்கிற தோற்றம் தெரியாத வண்ணம் இருக்கிறது. எழுத்தாளரின் வாசிப்பனுபவம் அதற்கு முக்கிய காரணமாக கூட இருக்கலாம்.


கம்யூனிசம் பேசப்பட வேண்டிய அவசியம் அதிகம் இருக்கிறது. ஜென்னி மார்க்ஸ் காதல் ஒப்புமை, போராட்டக்களம், போராட்ட வன்முறை போன்றவை அழகாக சொல்லப்பட்டுள்ளது.


கதைக்களத்தில் வரும் ஆண் பெண் நட்பான மைதிலி தருண் நட்பு. பெண் பெண் நட்பான பானு சாந்தி நட்பு அழகாக அமைந்துள்ளது.


எழுத்தாளரின் முதல் நாவல் என்பது தோன்றாத வகையிலான கதை அமைப்பு.


அச்சு நூலாக வரும் போது ஒற்றுப் பிழைகளை சரி செய்தால் இந்த நாவல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும்.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்

நரகவாசிகளின் வியர்வை -தீனன்