தொண்டை மண்டல பயணம் விரிவும் ஆழமும் தேடி


 தொண்டை மண்டல பகுதிகளில் உள்ள சில முக்கியமான தொன்மப் பகுதிகளைக் காண்பதற்கு விரிவும் ஆழமும் தேடி 2022ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி ஒருநாள் பயணத்தை ஒருங்கிணைத்தது. இந்த பயணத்தில் மொத்தம் 27பேர் கலந்து கொண்டனர். இராஜபாளையத்தில் இருந்து கிளம்பிய இந்த பயணத்தில் காலை உணவு திருப்பத்தூர் பகுதியில் எடுத்துக் கொள்ளப்பட்டது.


     முதலாவதாக திருமயம் கோட்டை பகுதியில் உள்ள கோட்டைச் சுவர்கள் மற்றும் அங்குள்ள போர் ஆயுதங்களை பார்வையிட்டதோடு உரையாடலும் நிகழ்ந்தது. திருமயம் கோட்டையிலிருந்து நார்த்தாமலை பகுதிக்கு சென்று அங்குள்ள சிற்பங்கள், வெற்றுக் கருவறைகள் மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதோடு சுற்றிலும் வெயிலடிக்க மலையின் சில பகுதிகளில் மட்டும் குளிர்மையை உணர்ந்த அனுபவம் அனைவருக்கும் வாய்த்தது.


 பின்னர் அன்னவாசல் பகுதியில் மதிய உணவை முடித்து விட்டு சித்தன்னவாசலில் உள்ள ஓவியங்கள் மற்றும் ஓவியங்கள் கூறும் தத்துவத்தோடு சமண கல்வெட்டு எழுத்துக்கள் குறித்த கருத்துக்களும் பகிரப்பட்டது. சித்தன்னவாசல் ஓவியக்கூடத்திற்கு செல்லும் வழியிலேயே தமிழ் நேவிகேஷன் கருணா அவர்களோடு சிறு உரையாடல் நிகழ்ந்தது. சித்தன்னவாசலில் தொடங்கிய கல்வெட்டு எழுத்துக்கள் பற்றிய கருத்து அலைகள் குடிமியான் மலை வரை தொடர்ந்தது. குடுமியான் மலை கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றை பார்த்த போது அறநிலையத்துறை கோவில்களை புதுப்பிக்கக் கூடிய பகுதிகளில் மேற்கொள்ளும் முறைகள் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் பிறழ்வுகள் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டதோடு, சைவ வைணவ கோயில்கள் தொடர்ச்சியாக இருப்பது குறித்த தகவல்களும் பேசப்பட்டது.


இறுதியாக பொன்னியின் செல்வன் புதினத்தைத் தொட்டு எழுந்த கொடும்பாளூர் மூவர் கோவில் பற்றிய செய்திகள் எங்கெங்கோ பறந்து சென்று மீண்டுமாக கொடும்பாளூர் மூவர் கோவிலை வந்தடைந்ததோடு திட்டமிட்டபடி பயணம் முழுமைபெற்றது. 













கொடும்பாளூர் மூவர் கோவில்





குடுமியான் மலை













தமிழ் நேவிகேஷன் கருணா அவர்களோடு






திருமயம் கோட்டை






நார்த்தாமலை நீர்த்தேக்கம்
































கருத்துகள்

  1. இந்த இடங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.கல்வெட்டுகள் பார்த்து வியந்தேன்.அழகான இடங்கள். சில தகவல்களையும் சேகரித்து கொண்டேன்.நன்றி பல.....

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பயணம்.. மனதுக்கு அமைதி.. அறிவுக்கு ஆனந்தம்..
    ❤️

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சூழல் அறம்- சுப்ரபாரதிமணியன்